உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ரூ.26,533 கோடிக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

ரூ.26,533 கோடிக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

மும்பை: இம்மாதத்தில் அன்னிய பங்கு முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை, கடந்த 22ம் தேதி வரை 26,533 கோடி ரூபாயாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.புவிசார் அரசியல், உள்நாட்டு பங்குகளின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினால், அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் இம்மாதம் இதுவரை 26,533 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். பங்கு விற்பனை தொடர்ந்து வரும் அதேவேளையில், அன்னிய முதலீட்டாளர்கள், நிகர அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதத்தில் விற்ற பங்குகளுடன் ஒப்பிடுகையில், நிகர வெளியேற்றங்களின் அளவு கணிசமாக குறைந்து உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை