உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வருமான வரி ரீபண்டு பெறுவது 11 ஆண்டுகளில் 474% உயர்வு

வருமான வரி ரீபண்டு பெறுவது 11 ஆண்டுகளில் 474% உயர்வு

புதுடில்லி:வருமான வரி ரீபண்டுகள், கடந்த 2013 - 14ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 474 சதவீதம் உயர்ந்து, கடந்த நிதியாண்டில் 4.77 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது தரவுகள் தெரிவிக்கின்றன. வருமான வரித்துறையால் வழங்கப்பட்ட ரீபண்டு தொகை, கடந்த 2014ம் நிதியாண்டில் 83,008 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த 2024 - 25ம் நிதியாண்டில் 4.77 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 2014ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 11 ஆண்டுகளில் 474 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மொத்த நேரடி வரி வசூல், 2013 - 14ல் 7.22 லட்சம் கோடியில் இருந்து, 2024 - 25ல் 27.03 லட்சம் கோடி ரூபாயாக 274 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோன்று, கடந்த 2014ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரித்தாக்கல் 3.8 கோடியில் இருந்து, 133 சதவீதம் வளர்ச்சி கண்டு 2024ல் 8.89 கோடியாக அதிகரித்து உள்ளது-. மேலும், வருமான வரி ரீபண்டுகளை வழங்க எடுத்துக்கொள்ளும் நாட்களும், 2014ம் நிதியாண்டில் 93 நாட்களாக இருந்ததைவிட, 2024ல் 81 சதவீதம் சரிந்து, வெறும் 17 நாட்களாக குறைந்துஉள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.மொத்த நேரடி வரிகளின் விகிதத்தில், ரீபண்டு பெறுவது 2014ம் நிதியாண்டில் 11.50 சதவீதத்தில் இருந்து, 2025 நிதியாண்டு நிலவரப்படி 17.60 சதவீதமாக உயர்ந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி