உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / தொழில் துறை உற்பத்தி 10 மாதங்களில் இல்லாத சரிவு

தொழில் துறை உற்பத்தி 10 மாதங்களில் இல்லாத சரிவு

புதுடில்லி :நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூன் மாதத்தில் 1.50 சதவீதமாக குறைந்து, 10 மாதங்களில் இல்லாத சரிவைக் கண்டுள்ளதாக, மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4.90 சதவீதமாக இருந்தது. முன்கூட்டியே பருவமழைக் காலம் துவங்கியதால், சுரங்கம் மற்றும் மின்சார துறைகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாகவும்; இதுவே ஒட்டுமொத்த வளர்ச்சி குறைய காரணமாக அமைந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு துறையை பொறுத்தவரை, வளர்ச்சி, க டந்தாண்டு ஜூன் மாதம் 3.50 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு ஜூன் மாதம் 3.90 சதவீதமாக சற்று அதிகரித்துள்ளது. சுரங்கத் துறை வளர்ச்சி 8.70 சதவீதமாகவும்; மின்சாரத் துறை வளர்ச்சி 2.60 சதவீதமாகவும் சரிந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சரா சரி தொழில் துறை உற்பத்தி வளர்ச் சி 2 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 5.40 சதவீதமாக இருந்தது. கடந்த மே மாதத்துக்கான வளர்ச்சி 1.20 சதவீதத்திலிருந்து 1.90 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Tamilan
ஜூலை 29, 2025 22:55

அடுத்த மாதம் பேப்பரில் எழுதி சரி செய்து விடலாம்


அப்பாவி
ஜூலை 29, 2025 16:21

அதனால என்ன? ஜி.எஸ்.டி வசூல் புதிய உச்சத்தை தொட்டால் போச்சு. ரிசர்வ் வங்கியும் ஒரு பத்து, பாஞ்சி லட்சம் கோடியை வங்கிகளுக்கு வரவு வெச்சுரலாம். ரெண்டு கோடி பேருக்கு பணி ஆணை குடுத்துரலாம். பத்தலேன்னா, நேருதான் காரணம்னு சொல்லிரலாம்.


venugopal s
ஜூலை 29, 2025 15:42

பொய் பொய்,நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம். பாஜகவின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக முன்னேறி விட்டது.


புதிய வீடியோ