உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பணவீக்கமும் சேர்ந்து கொண்டது

பணவீக்கமும் சேர்ந்து கொண்டது

•வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் லேசான இறக்கத்துடன் நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக வாராந்திர அடிப்படையில், இரண்டாவது வாரமாக, சந்தை குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. நிப்டி 2.55 சதவீதமும்; சென்செக்ஸ் 2.40 சதவீதமும் இறக்கம் கண்டன. • நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் துவங்கின. அன்னிய முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேறுவது, உற்சாகம் இழக்கச் செய்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஆகியவற்றை தொடர்ந்து, தற்போது பணவீக்கம் அதிகரிப்பால், பிற்பகலில் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகம் விற்பனை செய்தனர்.• நிப்டி குறியீட்டில், பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, நுகர்வோர் பொருட்கள் சார்ந்த குறியீடு, 1.53 சதவீதம் சரிவை கண்டது. மும்பை பங்குச் சந்தையில் 2,160 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும்; 1,798 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்துடனும்; 92 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.• குருநானக் ஜெயந்தியை ஒட்டி, இந்திய பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 1,850 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 0.06 சதவீதம் குறைந்து, 1 பேரலுக்கு 72.24 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 7 பைசா சரிந்து, 84.46 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை ஐச்சர் மோட்டார்ஸ் ஹீரோ மோட்டோகார்ப் கிராசிம் கோட்டக் வங்கி எச்.டி.எப்.சி., லைப்அதிக இறக்கம் கண்டவை ஹிந்துஸ்தான் யுனிலீவர் பி.பி.சி.எல்., பிரிட்டானியா டாடா கன்ஸ்யூமர் நெஸ்லே இந்தியா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை