உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / டிமெட் கணக்குகள் துவக்குவதில் ஆர்வம்

டிமெட் கணக்குகள் துவக்குவதில் ஆர்வம்

பங்கு முதலீட்டில் அதிகரித்து வரும் ஆர்வத்தின் அடையாளமாக தேசிய பங்கு சந்தையில், கடந்த நிதியாண்டில் 84 லட்சம் புதிய டிமெட் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.தேசிய பங்கு சந்தையில் மொத்த டிமெட் கணக்குகள் எண்ணிக்கை 4.92 கோடியாக உள்ளது. 2025ம் நிதியாண்டில் இது, 20 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இணையம் மூலம் வர்த்தகம் செய்ய உதவும் மேடைகள் வாயிலாக புதிய டிமெட் கணக்குகள் அதிகம் துவக்கப்படுவது தெரிய வந்து உள்ளது.ஜனவரி மாத காலத்தில் டிமெட் கணக்கில் லேசான சரிவு ஏற்பட்டது. எனினும், சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் பங்கு வர்த்தக ஆர்வம் அதிகரித்திருப்பதை அண்மை தரவுகள் உணர்த்துகின்றன.புதிய முதலீட்டாளர்களில் பலரும் இளம் தலைமுறையைச் சேர்ந்த டிஜிட்டல் அனுபவம் மிக்கவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. மாதாந்திர முதலீட்டாளர்கள் வளர்ச்சி, 17 சதவீதமாக இருக்கிறது. மேலும், பெண் முதலீட்டாளர்களும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய முதலீட்டாளர்களில் நான்கு பேரில் ஒருவர் பெண்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பங்கு முதலீடு ஆர்வம் பரவலாகி வருவதன் அடையாளமாகவும் இது கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை