உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / முதலீட்டாளர்கள் தயக்கத்தால் இறக்கம்

முதலீட்டாளர்கள் தயக்கத்தால் இறக்கம்

• வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் கணிசமான சரிவு கண்டன. வாராந்திர அடிப்படையில், நிப்டி, சென்செக்ஸ் 2 சதவீதம் இறக்கம் கண்டன. இதனால், கடந்த இரண்டு வாரங்கள் சந்தை குறியீடுகள் கண்ட உயர்வுக்கு தடை ஏற்பட்டது• நேற்று சந்தை குறியீடுகள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் துவங்கின. அன்னிய முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேறுவதுடன், பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பால், மூன்றாம் காலாண்டு முடிவுகள் மந்தமாக இருக்கும் என, முதலீட்டாளர்கள் மத்தியில் தயக்கம் இருந்தது. அதனால், நேற்று சந்தையில் அதிக ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டன. முடிவில், சந்தையின் இறக்கத்துக்கு இது வழிவகுத்தது• நிப்டி குறியீட்டில், தகவல் தொழில்நுட்பம் தவிர்த்து அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகளும் இறக்கம் கண்டன. • கடந்த மூன்று நாட்கள் பங்கு சந்தையில் சந்தை குறியீடுகள் இறக்கத்தை சந்தித்தால் முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 2,255 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 2.02 சதவீதம் உயர்ந்து, 78.47 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 பைசா குறைந்து, வரலாறு காணாத வகையில் 86.04 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா எச்.சி.எல்., டெக் இன்போசிஸ் விப்ரோஅதிக இறக்கம் கண்டவை ஸ்ரீராம் பைனான்ஸ் இண்டஸ்இண்ட் பேங்க் அதானி என்டர்பிரைசஸ் என்.டி.பி.சி., பெல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை