உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஹாட்ரிக் கண்ட சந்தைகள்

ஹாட்ரிக் கண்ட சந்தைகள்

• வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் முடிவடைந்தன• அமெரிக்காவில் பணவீக்க விகிதம் எதிர்பார்த்ததை விட குறைவாக பதிவானதால், வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு, இஸ்ரேல் -- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகியவற்றின் தாக்கத்தால், உலகளாவிய சந்தை போக்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின• உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, இந்திய சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த போது உயர்வுடன் துவங்கியது. தொடர்ந்து, முன்னணி நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் குறித்த சாதகமான எதிர்பார்ப்பால், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியதால், சந்தை அதிக உயர்வு கண்டது. வர்த்தகத்தின் இடையே நிப்டி, சென்செக்ஸ் தலா 0.77 சதவீதம் வரை உயர்வு கண்டன• நிப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள 12 துறைகளில், ஒன்பது துறைகள் சார்ந்த பங்குகள் உயர்வு கண்டன. அதிகபட்சமாக பொதுத்துறை வங்கி துறை குறியீடு, 2.55 சதவீதம் உயர்வு கண்டது• மும்பை பங்கு சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், 2,777 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 1,188 நிறுவன பங்குகள் குறைந்தும்; 102 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 4,342 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.18 சதவீதம் குறைந்து, 81.88 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா குறைந்து, 86.61 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை எச்.டி.எப்.சி., லைப் பெல்  எஸ்.பி.ஐ., லைப்  ஸ்ரீராம் பைனான்ஸ்  அதானி போர்ட்ஸ்அதிக இறக்கம் கண்டவை டிரென்ட் டாக்டர் ரெட்டீஸ் எச்.சி.எல்., டெக்  டாடா கன்ஸ்யூமர் இன்போசிஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி