உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அனுமதியின்றி கிளை திறக்கலாம்

 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அனுமதியின்றி கிளை திறக்கலாம்

மும்பை,வங்கி சாரா நிதி நிறுவனங்கள் முன் அனுமதி பெறாமலேயே புதிய கிளைகளை திறக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆர்.பி.ஐ., கூறியதாவது: கிளை அங்கீகார திருத்த வழிகாட்டுதல் 2026ன்படி வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், தங்களின் கிளைகள் விரிவாக்கத்துக்கு முன் அனுமதி பெற தேவையில்லை என்ற புதிய செயல்பாட்டு சலுகை அனுமதிக்கப்படுகிறது. வைப்புத்தொகை பெறும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு நிதி வலிமை அடிப்படையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நிகர சொந்த நிதி 50 கோடி வரை கொண்டுள்ள நிறுவனங்கள், தங்கள் மாநிலத்திற்குள் கிளைகளை திறந்து கொள்ளலாம் அல்லது முகவர்களை நியமிக்கலாம். ஐம்பது கோடி ரூபாய்க்கு மேல் நிகர சொந்த நிதி கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் நாடு முழுதும் கிளைகள் திறக்கவும் முகவர்களை நியமிக்கவும், அனுமதி வழங்கப்படுகிறது. இந்த மாற்றம் இந்நிறுவனங்களின் விரி வாக்கத்தை வேகப்படுத் தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை