என்.பி.எஸ்., கட்டண விகிதங்களில் மாற்றம்
தேசிய பென்ஷன் திட்ட மான என்.பி.எஸ்., தொடர்பான பல்வேறு சேவை கட்டண விகிதங்களை, பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் மாற்றி அமைத்துள்ளது.என்.பி.எஸ்., கட்டண விகிதம் தொடர்பாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், என்.பி.எஸ்., திட்டத்தில் முதல் முறை பதிவு செய்து கொள்வதற்கான கட்டணம் 400 ரூபாய் வரை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் முதல் முறையாக செலுத்தும் தொகைக்கு, 25,000 ரூபாய் வரம்பு, அந்த தொகையின் 0.50 சதவீதம் கட்டணமாக அமையும். எதிர்காலத்தில் செலுத்தப்படும் தொகைகளுக்கும் இது பொருந்தும்.நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 30 ரூபாய் கட்டணம் பொருந்தும். மின் என்.பி.எஸ்., கணக்குகளில் செலுத்தப்படும் தொகையில் 0.20 சதவீதம் கட்டணமாக அமையும். இது முன்னதாக பிடித்தம் செய்யப்படும். விலக்கப்படும் தொகைக்கும் கட்டணம் உண்டு.நேரடி மற்றும் ஆன்லைனில் துவங்கப்படும் கணக்குகளுக்கு இது பொருந்தும். அதே போல, என்.பி.எஸ்., வாத்சலயா கணக்கிற்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்.பி.எஸ்., திட்டத்தின் கீழ் பொருந்தும் கட்டண விகிதங்கள் இந்த கணக்கிற்கும் பொருந்தும் என ஆணைய சுற்றறிக்கை தெரிவிக்கிறது.