உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  வெங்காயம் கொள்முதல் விலை உயர்வு

 வெங்காயம் கொள்முதல் விலை உயர்வு

புதுடில்லி: வெங்காயம் கொள்முதல் விலையை கிலோவுக்கு 16.50 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவுத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், சேமிப்புக்கு ஏற்ற தரமான வெங்காயத்துக்கான குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட கொள்முதல் விலை குவின்டாலுக்கு 1,650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ 15 ரூபாய் 80 காசில் இருந்து 16 ரூபாய் 50 காசாக உயர்கிறது என்றார். இதற்கிடையே, மஹாராஷ்டிர விவசாயிகள், சாகுபடி செலவுகள் அதிகரித்துள்ளதால், தற்போதைய வெங்காயம் கொள்முதல் விலையை குவின்டால் 3,000 ரூபாயாக உயர்த்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். வெங்காய உற்பத்தி 2024 -- 25 307.67 லட்சம் டன் 2025 -- 26 307.37 லட்சம் டன் வெங்காய கொள்முதல் 2025 - 26 3 லட்சம் டன் 2026 -- 27 2 லட்சம் டன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை