மேலும் செய்திகள்
சமையல் எண்ணெய் இறக்குமதி 16சதவிகிதம் சரிவு
12-Apr-2025
கொண்டைக்கடலை இறக்குமதிக்கு 10 சதவீத வரி
29-Mar-2025
புதுடில்லி,:கடந்த நிதியாண்டில், நாட்டின் பருப்புகள் இறக்குமதி ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில், 67 லட்சம் டன்களாக அதிகரித்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டில் நிலையான வினியோகத்தை உறுதி செய்யவும், விலை உயர்வை தவிர்ப்பதற்கும், பெரும்பாலான பருப்பு வகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு வரியை ரத்து செய்திருந்தது. சாதகமான வரி அமைப்பின் காரணமாக, கடந்த நிதியாண்டில் பருப்பு இறக்குமதி ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் 67 லட்சம் டன்னாக அதிகரித்திருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. இறக்குமதி அதிகரிப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பு, மஞ்சள் பட்டாணி இறக்குமதியில் ஏற்பட்ட ஏற்றமே ஆகும். கடந்த 2025ம் நிதியாண்டில், இந்தியா 20.4 லட்சம் டன் மஞ்சள் பட்டாணியை இறக்குமதி செய்துள்ளது. இது மொத்த இறக்குமதியில் 31 சதவீதம். கடந்த 2018ம் நிதியாண்டுக்கு பின் அதிகபட்ச இறக்குமதி இதுவாகும். மஞ்சள் பட்டாணியைத் தொடர்ந்து, பருப்பு வகைகளில் இந்தியாவில் அதிகமாக இறக்குமதியாவது 'தேசி சென்னா' எனப்படும் கருப்பு கொண்டை கடலையாகும்.
2017 63.5 2.312018 54 2.542019 22 2.212020 24.3 2.302021 21 2.552022 24.4 2.732023 23.1 2.612024 43.8 2.422025 67 2.30• உற்பத்தி - பயிர் ஆண்டான ஜூலை முதல் ஜூன் வரையிலான பருவம்.ஆதாரம்: வர்த்தகம் மற்றும் சந்தை ஆதாரம்
12-Apr-2025
29-Mar-2025