உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பல்வகை சரக்கு முனையம் பணியை துவக்கிய ரிலையன்ஸ்

பல்வகை சரக்கு முனையம் பணியை துவக்கிய ரிலையன்ஸ்

சென்னை : சென்னை பல்வகை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைப்பதற்கான பணிகளை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் துவக்கியுள்ளது.தமிழகத்தின் ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தை, அனைத்து அதிநவீன தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் விரைந்து மேற்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை சரக்கு போக்குவரத்து மேலாண்மை நிறுவனம் வாயிலாக பல்வகை சரக்கு போக்குவரத்து பூங்கா திட்டம் உருவாக்கப்பட்டது.திருவள்ளூர் மப்பேடில், 182 ஏக்கரில், 1,423 கோடி ரூபாய் செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது. பல்வகை சரக்கு முனையத்தில் சேமிப்பு கிடங்கு, குளிர்ப்பதன கிடங்கு என ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான அனைத்து வித கட்டமைப்பு வசதிகளும், அதிநவீன தொழில்நுட்ப சரக்கு கையாளும் இயந்திரங்களும் இடம்பெறும்.சரக்கு முனைய திட்டத்தை செயல்படுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணியில் ஏற்பட்ட தாமதத்தால், 2022 மே மாதம் அடிக்கல் நாட்டியும், பணிகள் துவங்கப்படவில்லை. இந்நிலையில், முதற்கட்ட கட்டுமான பணிக்காக, 65 ஏக்கர் நிலத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு, டிட்கோ இந்தாண்டு பிப்ரவரியில் வழங்கியது. தற்போது அங்கு, சரக்கு முனையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கிஉள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை