உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  ரிலையன்ஸ் வசமானது மன்னா

 ரிலையன்ஸ் வசமானது மன்னா

புதுடில்லி: ஆரோக்கியம் சார்ந்த உணவு பொருள்கள் பிராண்டான 'மன்னா', ரிலையன்ஸ் குழுமம் வசமாகியுள்ளது. மன்னாவின் தாய் நிறுவனமான 'சதர்ன் ஹெல்த் புட்ஸ்' நிறுவனத்தை, ரிலையன்ஸின் நுகர்வோர் பிரிவான 'ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்', 156.42 கோடி ரூபாய்க்கு முழுமையாக கையகப்படுத்தியுள்ளது. சிறுதானியம் மற்றும் சத்தான உணவுகளை நோக்கி மக்கள் மாறிவரும் சூழலில், இந்த கையகப்படுத்தல் வாயிலாக, ஆரோக்கிய உணவுப் பொருள் பிரிவில் ரிலையன்ஸ் நிறுவனம் தன் இருப்பை வலுப்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், ரிலையன்ஸ் கன்ஸ்யூமர், தமிழகத்தைச் சேர்ந்த 'உதயம்' பருப்பு பிராண்டை கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி