மேலும் செய்திகள்
இரண்டாவது நாளாக சந்தை உயர்வு
24-Jan-2025
• வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இதனால், கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் சந்தை கண்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது • வங்கி அமைப்பில் நிதி கையிருப்பு பற்றாக்குறை 2.39 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததை தொடர்ந்து, பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக, ரிசர்வ் வங்கி, 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அறிவித்தது. இதனால், வரும் பிப்ரவரியில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பு அதிகரித்ததையடுத்து, வங்கித்துறை சார்ந்த பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், சந்தை நல்ல உயர்வு கண்டது. வர்த்தக நேரத்தின் போது நிப்டி, சென்செக்ஸ் தலா ஒரு சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டன• நிப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள 12 துறைகளில், ஐந்து துறை பங்குகள் ஏற்றம் கண்டன. அதிகபட்சமாக, ரியல் எஸ்டேட் குறியீடு 2.17 சதவீதமும்; நிதி, வங்கி மற்றும் பொதுத்துறை வங்கி கிட்டத்தட்ட 2 சதவீதமும் உயர்வு கண்டன. மாறாக, மருந்து துறை குறியீடு 2.33 சதவீதம் இறக்கம் கண்டன • சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெற்றுள்ள 21 துறைகளில், 16 துறை பங்குகள் இறக்கம் கண்டன. மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், 2,695 நிறுவன பங்குகள் குறைந்தும்; 1,265 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 117 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள், 4,921 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.62 சதவீதம் உயர்ந்து, 77.56 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா குறைந்து, 86.57 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் / இறக்கம் கண்டவை பஜாஜ் பைனான்ஸ் ஆக்ஸிஸ் பேங்க் ஸ்ரீராம் பைனான்ஸ் பஜாஜ் பின்சர்வ் எச்.டி.எப்.சி.,பேங்க்அதிக இறக்கம் கண்டவை சன் பார்மா பிரிட்டானியா ஹிண்டால்கோ கிராசிம் பெல்
24-Jan-2025