உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / சென்செக்ஸ் 50 ஒப்பந்தம் நிறுத்தம் செபி எப் அண்டு ஓ கட்டுப்பாடு எதிரொலி

சென்செக்ஸ் 50 ஒப்பந்தம் நிறுத்தம் செபி எப் அண்டு ஓ கட்டுப்பாடு எதிரொலி

புதுடில்லி:செபியின் புதிய 'எப் அண்டு ஓ' விதிகளுக்குப் பின், மும்பை பங்குச் சந்தையின் முன்னணி பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 50, வங்கி துறை பங்குகள் பிரிவான 'பேங்க்எக்ஸ்' ஆகியவற்றில், வாராந்திர குறியீட்டு ஒப்பந்தங்களை நவம்பர் 14ம் தேதி முதல் நிறுத்துவதாக மும்பை பங்குச் சந்தை அறிவித்துள்ளது.அதன்படி, அறிமுகமாகியுள்ள 'ஈக்விட்டி இன்டெக்ஸ் டெரிவேட்டிவ்'களுக்கான கடுமையான கட்டமைப்பில், குறைந்தபட்ச ஒப்பந்த அளவு அதிகரிப்பு, விருப்பத் தொகைகளின் முன்கூட்டிய சேகரிப்பு மற்றும் நிலை வரம்புகளின் தினசரி அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவை உள்ளன.இந்த நடவடிக்கைகள், முதலீட்டாளர்களை பாதுகாப்பதற்கும், காலாவதி நாட்களில் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கும் உதவும் என்று செபி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை