எல்.பி.ஜி.,யில் முன்னுரிமை; ஸ்டீல் ஆலைகள் கோரிக்கை
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஸ்டீல் உற்பத்தி பாதிப்படைந்துள்ளதால், ஸ்டீல் ஆலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எல்.பி.ஜி.,யை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இஸ்ரேல் -- ஈரான் போரால் எல்.பி.ஜி., பற்றாக்குறையால் சிறிய ஸ்டீல் உருக்காலைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறு மற்றும் நடுத்தர உருக்காலைகளின் எரிவாயு வினியோகத்துக்கு செவிசாய்த்த மத்திய உருக்கு அமைச்சகம், பெட்ரோலிய அமைச்சகத்தை நாடியுள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m2ybdhvh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்ஜினியரிங் உற்பத்தி துறையில் ஸ்டீல் உருக்கின் முக்கியத்துவம்,உற்பத்தியின்போது எரிவாயுவின் பங்களிப்பையும் விளக்கி, இத்துறைக்கு எல்.பி.ஜி.,யை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளன. பற்றாக்குறை நீடித்தால் லாபம் குறைவது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.