உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம் : ஏற்றத்தில் துவங்கி இறக்கத்தில் முடிவு

பங்கு சந்தை நிலவரம் : ஏற்றத்தில் துவங்கி இறக்கத்தில் முடிவு

வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் லேசான இறக்கத்துடன் முடிவடைந்தன. நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தொடர்பான சாதகத்தால், நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. இருப்பினும், ஆக.,1ம் தேதியுடன் அவகாசம் முடியும் சூழலில், இந்தியா -- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் நீடிக்கும் தாமதம், அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்தது ஆகிய காரணங்களால், சந்தை குறியீடுகள் இறக்கம் கண்டன. ஒருபுறம் சொமாட்டோ நிறுவன பங்குகள் உயர்ந்த போதிலும், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் நஷ்டத்தால் தனியார் வங்கிகளின் பங்குகள், ஐ.டி.,துறை பங்குகள் சரிந்ததால், நாள் முழுதும் நிப்டி, சென்செக்ஸ் ஊசலாட்டத்துடன் வர்த்தகமாகின. முடிவில், சந்தை குறியீடுகள் சிறிய இறக்கத்துடன் நிறைவடைந்தன.

உலக சந்தைகள்

திங்களன்று, அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி குறியீடுகள் சரிவுடனும்; ஹாங்காங்கின் ஹேங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின.

ஊசலாட்டத்துக்கு காரணங்கள்

* அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் நீடிக்கும் தாமதம் * அன்னிய முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தது நிப்டி: 25,060.90 மாற்றம்: 29.80 இறக்கம் சிவப்பு சென்செக்ஸ்: 82,186.81 மாற்றம்: 13.53 இறக்கம் சிவப்பு உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%) எட்டர்னல் 10.32 எச்.டி.எப்.சி., லைப் 1.36 ஹிண்டால்கோ 1.15 சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%) ஸ்ரீராம் பைனான்ஸ் 2.25 ஐச்சர் மோட்டார்ஸ் 2.11 ஜியோ பைனான்ஸ் 1.97 https://x.com/dinamalarweb/status/1947816865805570293

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் ____ கோடி ரூபாய்க்கு பங்குகளை ___இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.97 சதவீதம் குறைந்து, 68.54 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்து, 86.36 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ