உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

நிப்டி

முந்தைய முடிவு : 22,146.65நேற்றைய முடிவு: 22,023.35மாற்றம்: 123.31 இறக்கம் சிவப்பு

சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 73,097.28நேற்றைய முடிவு: 72,64

சரிவில் முடிந்த வாரம்

 இடையே ஒருநாள் ஏற்றத்தைக் கண்ட நிலையில், நேற்று சந்தை மீண்டும் இறக்கத்தை சந்தித்தது. உலக சந்தைகளின் மந்தமான போக்கு மற்றும் அன்னிய முதலீடு வெளியேற்றம் ஆகியவை காரணமாக, சந்தை சரிவைக் கண்டது. நிப்டி 0.56 சதவீதமும்; சென்செக்ஸ் 0.83 சதவீதமும் சரிவைக் கண்டன முதலீட்டாளர்கள், 'ஸ்மால் கேப், மிட் கேப்' ஆகியவற்றை, தொடர்ந்து மிகவும் ஜாக்கிரதை உணர்வுடன் அணுகியதும், சந்தை இறக்கத்துக்கு முக்கிய காரணமாகும். இருப்பினும், பல விஷயங்கள் சந்தைக்கு ஓரளவு கைகொடுத்துள்ளன. உலகளவில் பொருட்கள் விலை மட்டுப்பட்டது, அடுத்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை பிட்ச் நிறுவனம் உயர்த்தியது ஆகியவை, சந்தையை ஓரளவு நிலையாக வைத்திருக்க உதவியாக இருந்தது என்கிறார்கள், சந்தை நிபுணர்கள் டீசல், பெட்ரோல் விலையை இரண்டு ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டதை அடுத்து, இத்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 8 சதவீதம் வரை விலை குறைந்தன பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'ஒன்97 கம்யூனிகேஷன்' பங்குகள் விலை, ஐந்து சதவீதம் அளவுக்கு விலை உயர்வைக் கண்டது. பேடிஎம் நிறுவனம் எஸ்.பி.ஐ., ஆக்ஸிஸ், எச்.டி.எப்.சி, யெஸ் பேங்க் ஆகிய நான்கு வங்கிகள் வாயிலாக அதன் யு.பி.ஐ., சேவையை தொடர அனுமதி கிடைத்ததை அடுத்து, பங்குகள் விலை உயர்வைக் கண்டன ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஹாங்காங் ஆகியவை சரிவைக் கண்டன. ஷாங்காய் சந்தை மட்டும் ஏற்றம் கண்டது. வியாழனன்று, அமெரிக்க பங்குச் சந்தைகள் இறக்கத்தை சந்தித்தன அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று 4 பைசா அளவுக்கு சரிவைக் கண்டு 82.88 ரூபாயாக இருந்தது  உலகளாவிய பிரன்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 0.68 சதவீதம் சரிந்து, நேற்று 84.84 அமெரிக்க டாலராக இருந்தது.

நிறுவனங்கள் நிலை

(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 46% இறக்கம் கண்டவை : 51 மாற்றம் காணாதவை:3%

ஏற்றம் கண்ட பங்குகள்

 யு.பி.எல்., பார்தி ஏர்டெல் பஜாஜ் பைனான்ஸ் எச்.டி.எப்.சி., லைப் அதானி என்டர்பிரைசஸ்

இறக்கம் கண்ட பங்குகள்

 மஹிந்திரா அண்டு மஹிந்திரா பி.பி.சி.எல்., கோல் இந்தியா டாடா மோட்டார்ஸ் எல் அண்டு டி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ