உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பணவீக்கம் குறைந்ததால் உயர்வு

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் ஏற்றத்துடன் நிறைவு செய்தன. 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஏப்ரலில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்ததால், வரும் ஜூனில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.அன்னிய முதலீடுகள் மீண்டும் வெளியேற்றம், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஏமாற்றம் காரணமாக, வர்த்தக நேரத்தின் போது ஊசலாட்டம் காணப்பட்டது. எனினும், அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர், இந்தியா -- பாக்., இடையேயான போர் பதற்றம் தணிந்ததால், சந்தையில் நேர்மறையான சூழல் நிலவியது. முதலீட்டாளர்கள் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால், சந்தை குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்தன. அதிகபட்சமாக நிப்டி குறியீட்டில், உலோகத்துறை குறியீடு 2.46 சதவீதம் உயர்வு கண்டது.

உலக சந்தைகள்

அமெரிக்காவிலும் பணவீக்கம் குறைந்ததால், செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன. இதன் தொடர்ச்சியாக, ஆசிய சந்தைகளான தென்கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹாங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஜப்பானின் நிக்கி மட்டும் சரிவு கண்டது. இதே போன்று, ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின.

உயர்வுக்கு காரணங்கள்

 சில்லரை விலை பணவீக்கம் குறைந்ததால், ரெப்போ வட்டி குறைய வாய்ப்பு பதற்றங்கள் தணிந்ததால், சந்தையில் நிலவிய நேர்மறையான சூழல் முன்னணி நிறுவன பங்குகளை வாங்க

முதலீட்டாளர்கள் ஆர்வம்

. உயர்வு கண்ட பங்குகள் (நிப்டி) டாடா ஸ்டீல் 3.93% ஸ்ரீராம் பைனான்ஸ் 2.75% பெல் 2.61%சரிவு கண்ட பங்குகள் (நிப்டி) ஏசியன் பெயின்ட் 1.66% சிப்லா 1.33% கோடக் வங்கி 1.12%

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் 932 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.13 சதவீதம் குறைந்து, 65.88 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா அதிகரித்து, 85.32 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை