உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / அன்னிய நேரடி முதலீடு ஐந்தாவது இடத்தில் தமிழகம்

அன்னிய நேரடி முதலீடு ஐந்தாவது இடத்தில் தமிழகம்

புதுடில்லி கடந்த நிதியாண்டில், அதிகளவில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில், மஹாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளதாக, மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கர்நாடகா இரண்டாவது இடத்தையும், டில்லி மூன்றாவது இடத்தையும் பிடித்து உள்ளன. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 21.90 சதவீதம் முதலீடுகள் குறைந்ததால், குஜராத் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டு 6வது இடத்தில் இருந்து தமிழகம், 54.10 சதவீதம் அதிக முதலீடுகளை ஈர்த்து, 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. கடந்த நிதியாண்டில், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், நிகர அன்னிய நேரடி முதலீடு வரத்து 96 சதவீதம் சரிவுடன், 2,975 கோடி ரூபாயாக உள்ளது. மொத்த அன்னிய நேரடி முதலீடு வரத்து, 14 சதவீதம் அதிகரித்து, 6,88,500 கோடி ரூபாயாக பதிவாகி உள்ளது.

அன்னிய நேரடி முதலீடு ( 2019 அக்டோபர் - மார்ச் 2025)

மாநிலங்கள் மதிப்பு (ரூபாய் கோடியில்)ஆந்திரா 9,530.795அருணாச்சல் பிரதேசம் 59.755அசாம் 201.705பீஹார் 1,834.47டில்லி 3,21,362.05கோவா 1,672.715குஜராத் 3,81,755.74ஹரியானா 1,09,455.605ஹிமாச்சல் பிரதேசம் 3,085.245ஜார்க்கண்ட் 22,730.275கர்நாடகா 4,90,024.83கேரளா 11,689.115மத்திய பிரதேசம் 5,211.35மஹாராஷ்டிரா 7,53,741.92பஞ்சாப் 10,469.62ராஜஸ்தான் 23,104.785தமிழகம் 1,24,264.39தெலுங்கானா 91,528.34உத்தர பிரதேசம் 17,601.8உத்தராகண்ட் 1,885.64மேற்கு வங்கம் 16,218.425

அன்னிய நேரடி

முதலீடு வரத்து(2024--25) சிங்கப்பூர்30%மொரீஷியஸ்17%அமெரிக்கா11%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ