மேலும் செய்திகள்
நிப்டியின் ஏற்றம் தொடர வாய்ப்பு உள்ளது
16-Jun-2026
நிப்டி நேற்று 139 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய நிப்டி, நாளின் இறுதியில் 516 புள்ளிகள் இறக்கத்துடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு குறைந்தபட்சமாக 1.45 சதவீதமும், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 2.36 சதவீதமும் இறக்கத்துடனும் முடிவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளும் வீழ்ச்சியுடன் காணப்பட்டன. இவற்றில், 'நிப்டி மெட்டல்' குறியீடு குறைந்தபட்சமாக 0.91 சதவீதமும், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 2.72 சதவீதமும் சரிந்து முடிந்தன. வர்த்தகம் நடந்த 3,411 நிறுவனங்களின் பங்குகளில் 698 ஏற்றத்துடனும்; 2,631 இறக்கத்துடனும்; 82 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
16-Jun-2026