3 புதிய விமான நிறுவனங்கள் விரைவில் சேவை துவங்க வாய்ப்பு மத்திய அரசு தடையின்மை சான்று வழங்கியது
புதுடில்லி: இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை பாதிப்பை தொடர்ந்து, இந்திய விமான போக்குவரத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக, மூன்று புதிய விமான சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நம் நாட்டில் சிவில் விமான போக்குவரத்து சேவையை பொறுத்தவரை, இண்டிகோ, ஏர் இந்தியா ஆகியவையே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இரண்டு நிறுவனங்களும் கிட்டத்தட்ட 90 சதவீதத்துக்கும் அதிகமான பயணிகளை கையாளுகின்றன. சமீபத்தில் விமானிகளுக்கான அதிக ஓய்வு நேரம் தொடர்பான விதிகளால், போதிய விமானிகள் இல்லாதது, ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ விமான சேவையில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரே ஒரு விமான நிறுவனத்தில் ஏற்படும் நெருக்கடி, ஒட்டுமொத்த விமான போக்குவரத்து அமைப்பிலும் எவ்வளவு விரைவாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இது வெளிப்படுத்தி உள்ளது. இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தன் சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: கடந்த வாரத்தில் இந்திய வான்வெளியில் சிறகை விரிக்க, புதிய விமான சேவை வழங்க முன்வந்துள்ள மூன்று நிறுவனங்களை சேர்ந்த குழுவினருடன் பேச்சு நடத்தினோம். இதில், ஷாங் ஏர், ஏற்கனவே அரசின் தடையின்மை சான்றிதழை பெற்று விட்டது. அல் ஹிந்த் ஏர் மற்றும் பிளை எக்ஸ்பிரஸ் நிறுவனங்களுக்கு இந்த வாரம் தடையின்மை சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளால், உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான போக்குவரத்து சந்தையாக இந்தியா மாறியுள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ள, அதிகளவில் விமான நிறுவனங்களை ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம். உடான் போன்ற திட்டங்கள் வாயிலாக, ஸ்டார் இந்தியா, ஒன் ஏர் மற்றும் பிளை91 உட்பட பல சிறிய நிறுவனங்கள், உள்நாட்டிற்குள் நகரங்களை இணைப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதில், இன்னும் வளர்ச்சி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இவற்றில், அல் ஹிந்த் ஏர் நிறுவனம், வரும் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் விமான சேவையை துவங்க திட்டமிட்டுள்ளது. விமான போக்குவரத்தில் ஏர் இந்தியா, இண்டிகோ ஆகிய இரு நிறுவனங்களின் ஏகபோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி