உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஸ்விக்கி சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியானது

ஸ்விக்கி சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியானது

புதுடில்லி:உணவு வினியோக வணிகத்தில் ஈடுபட்டு வரும் 'ஸ்விக்கி' நிறுவனம், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே, ஒரு லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கடந்துள்ளது. சமீபத்தில் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்டிய ஸ்விக்கி நிறுவனம், நேற்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. பங்கு வெளியீட்டின்போது, பங்கு ஒன்றின் விலை 390 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சந்தையில் 420 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது.அதுமட்டுமல்லாமல்; வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்திலேயே நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச் சந்தையில், ஸ்விக்கியின் பங்கு விலை, கிட்டத்தட்ட 19 சதவீதம் அதிகரித்து, 464 ரூபாயாகவும்; சந்தை மதிப்பு 1.04 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ