உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

1,726கோடி ரூபாய் அளவில், கடந்த ஏப்ரலில் காபி ஏற்றுமதி அதிகரித்து இருந்தது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 1,167 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு காலண்டர் ஆண்டில், 'அரபிகா' வகை காபி ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், 'ரோபஸ்டாஸ்' காபி ஏற்றுமதி, சற்று சரிவடைந்துள்ளது.3,00,000கோடி ரூபாய் வரையிலான ஈவுத் தொகையை, நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட 2.10 லட்சம் கோடி ரூபாயை விட சாதனை அதிகரிப்பு என கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் இந்த ஈவுத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும்.0.20சதவீதம் அளவுக்கு பிக்சட் டிபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ., மீண்டும் குறைத்துள்ளது. ஏற்கனவே, கடந்த மாதம் 15ம் தேதி வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், இம்மாதம் 16ம் தேதி மீண்டும் வட்டியை குறைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை