உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

2,400

ஸ் விக்கி நிறுவனம், பயண சேவைகள் வழங்கி வரும் ரேபிடோ நிறுவனத்தில் தனக்கிருந்த மொத்த 12 சதவீத பங்குகளையும் 2,400 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. கடந்த 2022ல் கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகளை வாங்கியது. ரேபிடோ நிறுவனமும் உணவு டெலிவரி வணிகத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, 'கான்பிளிக்ட் ஆப் இன்ட்ரெஸ்ட்' அதாவது, ஆதாய முரண் காரணத்துக்காக பங்குகளை விற்றதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த பிராசஸ் குழுமத்துக்கும், மொரீஷியசை சேர்ந்த வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் முதலீட்டு நிறுவனத்துக்கும் இந்த பங்குகளை அது விற்பனை செய்துள்ளது. 13,200 போ ன்பே நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக கிட்டத்தட்ட 13,200 கோடி ரூபாய் நிதி திரட்ட, செபியிடம் ரகசிய முறையில் விண்ணப்பித்துள்ளது. அமெரிக்காவின் வால்மார்ட் குழுமத்தைச் சேர்ந்த இந்நிறுவனம், கடந்த 2023ல், நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து 7,021 கோடி ரூபாய் திரட்டியிருந்தது. ஜெனரல் அட்லான்டிக், வால்மார்ட், ரிப்பிட் கேபிடல், டி.வி.எஸ்., கேபிடல் பண்ட்ஸ் மற்றும் டைகர் குளோபல் ஆகியவை முதலீடு செய்திருந்தன. அப்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !