முன்பேர ஒப்பந்த காலாவதி நாள் அடுத்த வாரம் முதல் மாறுகிறது
மும்பை: 'நிப்டி 50' குறியீட்டின் முன்பேர வணிக ஒப்பந்தங்களுக்கான எக்ஸ்பைரி நாள் வியாழக்கிழமையாக உள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் எக்ஸ்பைரி நாள் செவ்வாய்க்கிழமையாக இருக்கிறது. இந்நிலையில், அடுத்த வாரம் முதல் இரண்டு குறியீடுகளின் முன்பேர வணிக ஒப்பந்த எக்ஸ்பைரி நாட்களும் ஒன்றுக்கொன்று மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது, செவ்வாய்க்கிழமை நிப்டி 50 எக்ஸ்பைரி; வியாழக்கிழமை சென்செக்ஸ் எக்ஸ்பைரி ஆகிறது. வாராந்திர, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு என அனைத்து வகையான எக்ஸ்பைரி ஒப்பந்தங்களுக்கும் இந்த மாற்றம் பொருந்தும். பி.எஸ்.இ., அறிவிப்பு இதனிடையே, வரும் டிசம்பர் மாதம் 8ம் தேதி முதல், ஆப்ஷன்ஸ் மற்றும் பியூச்சர்ஸ் பிரிவிலும் பங்குச் சந்தை துவங்குவதற்கு முன்பான வர்த்தகம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என மும்பை பங்குச் சந்தை அறிவித்துள்ளது. இதன்படி, கா லை 9.00 மணி முதல் 9.15 மணி வரை பங்குச் சந்தை வர்த்தகம் துவங்குவதற்கு முன்பு வர்த்தகம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.