மேலும் செய்திகள்
'கர்நாடகா பாக்ஸ்கான் ஆலை உற்பத்திக்கு தயார்'
18-May-2025
ஜி.சி.சி., எனப்படும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்களுக்கான அலுவலகங்களை, இந்தியாவில் அமைப்பதற்கான சிறந்த தேர்வாக தென்னிந்திய நகரங்கள் அமைந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனைநிறுவனமான 'அனராக்' தெரிவித்துள்ளது.நடப்பாண்டு முதல் காலாண்டில் ஜி.சி.சி., அலுவலக குத்தகைக்கான இடங்களில் பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகியவைகூட்டாக 64 சதவீத பங்குடன் முன்னிலைவகிக்கின்றன.ஐபோன் தயாரிப்பு துவக்கம்
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், அதன் ஓசூர் ஆலையில், ஐபோன் 16 மாடல்களை தயாரிக்க துவங்கியுள்ளது. இதுவரை ஓசூரில் ஐபோன்களுக்கான உறைகளை தயாரித்து வந்த நிலையில், ஐபோன் 16 மற்றும் 16இ மாடல்களை தயாரிக்க துவங்கியுள்ளது. சீனாவை சார்ந்திருப்பதை குறைக்கும் ஆப்பிளின் முடிவு இதன் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.மாம்பழ ஏற்றுமதி வளர்ச்சி
அமெரிக்காவுக்கான மாம்பழ ஏற்றுமதி, ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த நிதியாண்டில் ஏப்ரல் - பிப்ரவரி வரை, இந்தியாவின் மாம்பழ உற்பத்தியில் 31 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மாம்பழங்களுக்கான ஏற்றுமதி வருவாய் 63 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இம்மாத துவக்கத்தில் மும்பை கதிர்வீச்சு மையத்தில் நிகழ்ந்த இடையூறு காரணமாக, தரவு பதிவில் ஏற்பட்ட பிழைகளால், அமெரிக்காவுக்கான 12 மாம்பழ பெட்டகங்கள் நிராகரிக்கப்பட்டன.அவகாசம் நீட்டிப்பு
மின் சாதன பொருட்களுக்கான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிப்பதற்கான கால அவகாசத்தை, மத்திய அரசு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது. முன்னதாக, நடப்பாண்டு மார்ச் மாதம் முதல், அனைத்து வகையான மின்சார பொருட்களுக்கும் ஒரே மாதிரியான தரக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்றது.
சுசூகி ரூ.1,200 கோடி முதலீடு
'சுசூகி மோட்டார் சைக்கிள்' இந்தியா நிறுவனம், ஹரியானா மாநிலம் கார்கோடாவில், 1,200 கோடி ரூபாய் முதலீட்டில், இரு சக்கர வாகன தயாரிப்பு ஆலை அமைக்க உள்ளது. அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற இந்த ஆலையில், வரும் 2027ல் ஆண்டுக்கு 7.50 லட்சம் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு துவங்கும் என்றும்; 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜென்சால் மீது விசாரணை
'ஜென்சால் இன்ஜினியரிங்' மற்றும் அதனுடன் தொடர்புடைய 18 நிறுவனங்கள் மீதான விசாரணையை, அடுத்த மூன்று முதல் ஐந்து மாதங்களுக்குள் முடிக்க மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, செபியிடம் இருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு, என்.எப்.ஆர்.ஏ., எனும் தேசிய நிதி அறிக்கை ஆணையம் முதற்கட்ட விசாரணையை துவங்கியுள்ளது.
18-May-2025