உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  உனோ மிண்டா நிறுவனம் ரூ.1,750 கோடி முதலீடு

 உனோ மிண்டா நிறுவனம் ரூ.1,750 கோடி முதலீடு

புதுடில்லி: வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் 'உனோ மிண்டா' நிறுவனம், நடப்பாண்டில், 1,750 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் வாயிலாக, புதிய உற்பத்தி ஆலை மற்றும் விரிவாக்கம், நிலம் கையகப்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கு இ - ஆக்சில், டிரான்ஸ்மிஷன் அமைப்புகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, மஹாராஷ்டிராவில் மின்சார உதிரிபாக உற்பத்தி ஆலை பிரத்யேகமாக அமைக்கப்படுகிறது. அதேபோல், அதிக தேவையுள்ள 'பனோரமிக் சன் ரூப்' மற்றும் இதர முக்கிய வாகன அம்சங்கள் தொடர்பான வணிகத்திலும் இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை