உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / மியூச்சுவல் பண்டு முதலீடு பலனை அதிகரிக்கும் வழிகள்

மியூச்சுவல் பண்டு முதலீடு பலனை அதிகரிக்கும் வழிகள்

நீண்ட கால நோக்கில் செல்வ வளத்தை உருவாக்க ஏற்ற முதலீட்டு வழியாக மியூச்சுவல் பண்டு கருதப்படுகிறது. மியூச்சுவல் பண்டு முதலீடு, வரி நோக்கிலும் சாதகமான பலனை அளிக்கும் திறன் கொண்டிருப்பதோடு, பணவீக்கத்தை எதிர்கொள்ளவும் உதவுவதாக கருதப்படுகிறது. எனினும், மியூச்சுவல் பண்டுகள் மூலம் செயல்திறன் வாய்ந்த பலனை பெற பொறுமையும், இலக்குகளை மனதில் கொண்டு செயல்படும் தன்மையும் தேவை. மேலும், மியூச்சுவல் பண்டு முதலீட்டில் பரவலாக மேற்கொள்ளப்படும் தவறுகளையும் தவிர்க்க வேண்டும்.

குறுகிய கால பலன்:

மியூச்சுவல் பண்டு முதலீட்டை நீண்ட கால நோக்கில் மேற்கொள்ள வேண்டும். ஏழு ஆண்டு காலம் என்பது நல்லது. குறுகிய கால பலனை எதிர்பார்த்து முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நிதிகளின் பின்னே உள்ள பங்குகள் உள்ளிட்டவை இடைப்பட்ட காலத்தில் ஏற்ற, இறக்கத்தை சந்திக்கலாம்.

முதலீடு தொகை:

ஒருவர் தன் நிதி இலக்கிற்கு ஏற்ற வகையில் தொகையை முதலீடு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, 20 ஆண்டு காலத்தில் 1 கோடி ரூபாயை பெற வேண்டும் எனில், அதற் கேற்ப முதலீடு செய்ய வேண்டும். இதை மனதில் கொண்டு, மொத்த முதலீடு அல்லது மாதாந்திர முதலீடு தொகை அமைய வேண்டும்.

பாதியில் விலகல்:

எஸ்.ஐ.பி., என்பதும், சீரான முதலீடு வழியில் தொடர்ச்சியாக முதலீடு செய்யலாம். ஆனால், சந்தை ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகும் தன்மை கொண்டது என்பதால் இடையே சரிவு ஏற்பட்டால் சீரான முதலீட்டை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். இது பலனை பாதிக்கும். தொடர்ச்சியான முதலீடு அவசியம்.

சரிவின் தாக்கம்:

உண்மையில் சந்தையின் இறக்கமான போக்கு நல்ல பங்குகளை கண்டறிவதற்கான வாய்ப்பாக அமையலாம். எனவே, சரிவை கண்டு அஞ்சி முதலீட்டை விலக்கி கொள்வதையும் தவிர்க்க வேண்டும். நீண்ட கால நோக்கை மனதில் கொண்டு செயல்படும் போது சந்தை ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ளலாம்.

சரியான தேர்வு:

நிதி இலக்குகளை அடைய உதவும் சரியான நிதிகளை தேர்வு செய்ய வேண்டும். நிதிகளை அவற்றின் அண்மை செயல்பாடு அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யக்கூடாது. கடந்த கால செயல்பாடு எதிர்காலத்தில் தொடரும் என்பது தெரியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 19, 2024 12:41

எம் எஃப் இல் முதலீடு செய்யும் முன்பு தனது வயது, குடும்பச்சுமை, சீரான வருமானமே, ரிஸ்க் எடுக்கும் திறன், வேலை இழக்கும் அபாயம் ஆகிய னைத்தையும் அலசிவிட்டே முதலீடு செய்யவேண்டும் ....


Venkatramani T
ஆக 19, 2024 11:42

சூப்பர்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை