அக்., 29 - 31ல் சென்னையில் விண்டெர்ஜி இந்தியா மாநாடு
மும்பை:'விண்டெர்ஜி இந்தியா'வின் ஏழாவது மாநாடு, வரும் 29 முதல் 31ம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்திய காற்றாலை மின்சார துறைக்கான சர்வதேச வர்த்தக கண்காட்சியாக இது நடத்தப்படுகிறது. சமீபத்தில் காற்றாலை உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த துறைக்கு மேலும் வலுசேர்க்க, மாநாடு நடத்தப்பட இருப்பதாக, மாநாட்டை நடத்தும் இந்திய காற்றாலை விசையாழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.