உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புதிய ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் கேரளாவில் ஜோஹோ துவக்கம்

புதிய ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் கேரளாவில் ஜோஹோ துவக்கம்

திருவனந்தபுரம்:கேரளாவின் கொட்டா ரக் கரையில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ஜோஹோ நிறுவனம் துவங்கியுள்ளது. புதிய மையத்தை, கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார். ஜோஹோ சார்பில் இணை நிறுவனர்கள் ஸ்ரீதர் வேம்பு, ஷைலேஷ் டேவி, டோனி தாமஸ் ஆகியோர் பங்கேற்றனர். 250 பேர் பணியாற்றக்கூடிய இந்த மையம், துவக்கத்தில் ஏ.ஐ., மற்றும் ரோபோடிக் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தும். நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, வேலைக்காக மக்களை வலுக்கட்டாயமாக நகரத்துக்கு அழைத்து வராமல், அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்பு வழங்க விரும்புவதாக தெரிவித்தார்.இந்த புதிய மையம், நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பாதையில், புறக்கணிக்கப்பட்ட பகுதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும்.இதனிடையே, அசிமோவ் ரோபோடிக்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஜோஹோ கையகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஆபத்தான, திறனற்ற மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடிய சிக்கல்களை சரி செய்வதற்கான ரோபோடிக் தீர்வுகளை நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை