உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.31 கோடி உயர்ரக கஞ்சா சிக்கியது; சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.31 கோடி உயர்ரக கஞ்சா சிக்கியது; சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை

பெங்களூரு: தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட, 31 கோடி ரூபாய் மதிப்பிலான, உயர்ரக கஞ்சா பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கியுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த 18ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.39 கோடி ரூபாய் மதிப்பிலான, 3 கிலோ 97 கிராம் உயர்ரக கஞ்சா சிக்கியது.அதன் பின், 19ம் தேதி, 12.57 கோடி ரூபாய் மதிப்பிலான 36 கிலோ; 9.38 கோடி ரூபாய் மதிப்பிலான 26 கிலோ 80 கிராம்; 5.35 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 கிலோ 300 கிராம் உயர்ரக கஞ்சா சிக்கியது.மேலும், பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட, 2.10 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு கிலோ உயர்ரக கஞ்சா சிக்கியது. மொத்தமாக ஐந்து வழக்குகளில் 31 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
செப் 22, 2026 20:25

எனக்கு ஒன்று ரொம்ப நாட்களாக புரியவில்லை. அது என்னவென்றால், தாய்லாந்து நாட்டின் பாங்காக் விமான நிலையத்தில் இந்த கடத்தல்காரர்கள் எப்படி பரிசோதனையில் இருந்து தப்பித்தார்கள் என்பதுதான்? ஒரு முறை இல்லை, பல முறை இதுபோன்ற கடத்தல்கள் நடந்துள்ளன. அப்படி இருந்தும் கடத்தல்காரர்கள் அவர்கள் கடத்தல் "பணியை" "மிகவும் திறம்பட" செய்கிறார்கள். Hats off to them.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி