உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணவருடன் கூடி வாழ்வதற்காக சிறுமியை பலி கொடுத்த பெண்

கணவருடன் கூடி வாழ்வதற்காக சிறுமியை பலி கொடுத்த பெண்

லக்னோ: கணவருடன் தகராறு இல்லாமல் வாழ்வதற்காக, பக்கத்து வீட்டுச் சிறுமியை, கடவுளுக்கு பலிகொடுத்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர். உ.பி., மாநிலம் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் உஷா சர்மா. இவருக்கும், இவரது கணவருக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சாமியார் ஒருவரைச் சந்தித்து, 'என் கணவரும், நானும், தகராறு இல்லாமல் வாழ்வதற்கு ஏதாவது பரிகாரம் உள்ளதா' எனக் கேட்டார். அந்த சாமியார், 'ஒரு சிறுமியை கடவுளுக்கு பலியிட்டால், உங்கள் கணவருடன், நீங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் வாழலாம்' என்றார். இதையடுத்து, தன் பக்கத்து வீட்டில் வசித்த, ஏழு வயது சிறுமியை, உஷாவும், அவரது குடும்பத்தினரும், இரண்டு நாட்களுக்கு முன், யாருக்கும் தெரியாமல் கடத்திச் சென்றனர். கடவுள் சிலைக்கு முன், அந்த சிறுமியை அமரவைத்து, மலர்களால் அலங்கரித்து, பூஜைகள் செய்து, அதற்கு பின், பலியிட்டுள்ளனர். சிறுமியின் உடலை, ஊருக்கு வெளியில் போட்டு விட்டனர். உடலை கண்டுபிடித்த போலீசார், அந்த சிறுமி பலியிடப்பட்டதற்கான அடையாளங்கள் தென்பட்டதை அடுத்து, தீவிர விசாரணை நடத்தினர். இதில், உஷா சர்மாவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூன்று பேரும் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி