உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோசமாக காணப்படும்புதுப்பட்டி கோவில் சாலையால் அவதி

மோசமாக காணப்படும்புதுப்பட்டி கோவில் சாலையால் அவதி

கிருஷ்ணராயபுரம், :புதுப்பட்டி, மாரியம்மன் கோவில் சாலை மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கருப்பத்துார் பஞ்சாயத்து புதுப்பட்டி மாரியம்மன் கோவில் முதல், வேங்காம்பட்டி தாளியாம்பட்டி சாலை பிரிவு வரை, தார் சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. பல இடங்களில் சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. சாலை வழியாக விவசாயிகள், மக்கள் வாகனங்களில் செல்லும் போது சிரமப்படுகின்றனர். சில நேரங்களில், வாகனங்களில் இருந்து கீழே விழுந்து காயமடைகின்றனர்.எனவே, மோசமான நிலையில் உள்ள சாலையை புதுப்பிக்க பஞ்சாயத்து நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை