உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி யாருக்கு: இன்று ஓட்டு எண்ணிக்கை ?

டில்லி யாருக்கு: இன்று ஓட்டு எண்ணிக்கை ?

புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் யார் பெரும்பான்மை பெறுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.டில்லியில் மொத்தமுள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 5ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. நேற்று ( பிப்.07) இரவு 10 மணிளயவில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில், டில்லி சட்டசபை தேர்தலில் 94 லட்சத்து 51 ஆயிரத்து 997 பேர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.இதில் ஆண் வாக்காளர்கள் 50 லட்சத்து 42 ஆயிரமும், பெண் வாக்காளர்கள் 44 லட்சத்து 8 ஆயிரம் 606 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 403 பேர் வாக்களித்துள்ளனர் என செய்தி வெளியிட்டுள்ளது.இத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி - பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என, கூறப்பட்டுள்ளதால் டில்லியில் பா.ஜ., ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஓட்டு எண்ணிக்கையையொட்டி 19 ஓட்டு எண்ணும் மையங்களிலும், தலா இரண்டு கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே, 10,000க்கும் மேற்பட்ட டில்லி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். ஓட்டு எண்ணும் மையங்களுக்குள் மொபைல் போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Duruvesan
பிப் 08, 2025 08:00

ஆக evm செட்டிங் பண்ணிட்டாங்க. போலீஸ் வோட்டு போட உடலை, ec வோட்டர் லிஸ்ட்ல கோல்மால், ed பொய் கேஸ் போட்டாங்க, கோர்ட் ஜெயில்ல போட்டாங்க, பிஜேபி காசு குடுத்து ஆட்களை விலைக்கு வாங்கினாங்க, மக்கள் வாக்கு சாவடிக்கு வராமல் மிரட்ட பட்டனர், என்னை கொல்ல சதி, இப்படி நெறய காரணத்தால் அவன் ஜெயிச்சான், நான் ஜெயித்தால் ஜனநாயம் வென்றது


Priyan Vadanad
பிப் 08, 2025 07:37

காங்கிரஸ தேடுனாலும் கெடைக்காது. கட்ட விளக்குமாறு கதவுக்கு பின்னால மறய்ஞ்சி கெடக்கு. தாமரை மொட்டு விரிக்க டெல்லி ஜொலிக்குது.


புதிய வீடியோ