உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி ஓட்டல்களில் விலை குறைய நடவடிக்கை

திருப்பதி ஓட்டல்களில் விலை குறைய நடவடிக்கை

நகரி: 'திருமலையைச் சுற்றிய பகுதிகளில், இந்தியன் ரயில்வே சார்பில், கேண்டீன்கள் ஏற்படுத்தப்படும்' என, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சிலர் கூறியதாவது: திருமலை திருப்பதியைச் சுற்றியுள்ள, பெரும்பாலான தனியார் ஓட்டல் மற்றும் கேண்டீன்கள், தரமற்ற உணவு வகைகளை அதீத விலைக்கு வினியோகிப்பதாக, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, அங்கு செயல்படும் ஓட்டல் மற்றும் கேண்டீன்களை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை, திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, திருமலையில் உள்ள தனியார் ஓட்டல்களை கையகப்படுத்தி, அந்த இடத்தில் இந்தியன் ரயில்வே சார்பில் கேண்டீன்கள் திறக்கப்படுகின்றன. இதுதொடர்பாக, திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி., இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஒரு சில இடங்களில் மட்டும், இந்த ரயில்வே கேண்டீன்கள் ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அளிக்கும் வரவேற்பைப் பொறுத்து, மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இவ்வாறு, அந்த அதிகாரிகள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி