உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காட்டு யானைகள் அரண்: "குட்டியானை குறும்பு: பயணிகள் மகிழ்ச்சி

காட்டு யானைகள் அரண்: "குட்டியானை குறும்பு: பயணிகள் மகிழ்ச்சி

மூணாறு: மாட்டுப்பட்டி அணையின் கரையோரம் குட்டியை ஈன்றது காட்டுயானை. மூணாறு அருகே, மாட்டுபட்டி அணையின் கரையில் கடந்த ஒரு வாரமாக நான்கு காட்டுயானைகள் முகாமிட்டிருந்தன. இக்கும்பலைச் சேர்ந்த யானை ஒன்று நேற்று முன்தினம் இரவு அணையின் கரையோரத்தில் பிரசவித்தது.நேற்று காலை குட்டியுடன் யானைக்கூட்டம் சுற்றித்திரிவதை பார்த்த சுற்றுலா படகு டிரைவர்கள் அவற்றை பயணிகளுக்கும் காண்பித்தனர். குட்டியானையை நடுவில் நிறுத்தி, மீதமுள்ள யானைகள் அரண் போல் சுற்றி வளைத்து, பாதுகாப்பு அளித்தது காண்போரை வியப்படையச் செய்தது. குட்டியானை நடந்து செல்வதற்கு வசதியாக, வழிகளில் காணப்படும் தடைகளை அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றன. குட்டியின் குறும்பையும், அதற்கு யானைகள் அளித்த பாதுகாப்பையும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்