உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரம்ஜான் சிந்தனைகள்-22

ரம்ஜான் சிந்தனைகள்-22

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்உலகில் மூன்று கண்கள் நரகத்தைப் பார்க்காது என்கிறார் நபிகள் நாயகம். 1. இறைவழியில் போர் புரிவதற்காக விழித்திருந்த கண்கள்.2. இறை பயத்தால் கண்ணீர் வடித்த கண்கள்.3. பார்க்கக் கூடாது என மார்க்கம் தடை செய்ததை பார்க்காத கண்கள்.ஆனால் சிலர் என்ன செய்கிறார்கள். வீணான விஷயத்தில் நேரத்தை செலவிடுகிறார்கள். எனவே அவர்கள் திருந்தி மார்க்கப்பற்றுடன் குர்ஆனை ஓத வேண்டும். மேலும் அவர்கள் கீழ்க்கண்டதை நினைவில் கொள்ள வேண்டும். மனிதர்களே! இறைவனுக்கு பயந்து செயல்படுங்கள். அவன் உங்களை ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். ஆரம்பத்தில் ஒருவரை படைத்து, அவரில் இருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவர்களில் இருந்து ஆண், பெண் என மனிதர்களை படைத்தான். ஆகவே உறவினர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அவன் உங்களைக் கண்காணிக்கிறான். இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை