உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவமனையில், திண்டிவனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. திண்டிவனம் அடுத்த முட்டியூரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், தையல் தொழில் பார்க்கிறார். இவரின் மனைவி நித்யா,23. நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த 15 நாட்களுக்கு முன், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.அங்கு, நித்யாவிற்கு நேற்று மதியம் 2 மணிக்கு, இரண்டு பெண், ஒரு ஆண் என, மூன்று குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகளும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ