மேலும் செய்திகள்
திருப்புவனம் சந்தையில் குவிந்த வியாபாரிகள்
10 hour(s) ago
பறவைக் காய்ச்சலுக்கு தனி வார்டு
10 hour(s) ago
கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு
10 hour(s) ago
சேவையே செய்யாமல் சேவை வரி வசூலிப்பதா
10 hour(s) ago
தனி தெலுங்கானா கோரிக்கையை வற்புறுத்தி, உஸ்மானிய பல்கலைக் கழக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடப்பதால் அங்கு பாதுகாப்பு படையினர், 3 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர். தனி தெலுங்கானா மாநில போராட்டம் உருவான இடம், உஸ்மானிய பல்கலைக் கழகம் தான். எனவே, அங்கு அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனி தெலுங்கானா கோரிக்கையை வற்புறுத்தி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். வெளிமாவட்ட மாணவர்கள், இந்த போராட்டத்தில் பங்கேற்க போலீசார் அனுமதிக்கவில்லை.
தனி தெலுங்கானா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உஸ்மானிய பல்கலைக் கழகத்தில் நுழைய முயன்ற எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலர் நேற்று கைது செய்யப்பட்டனர். 'உஸ்மானிய பல்கலைக் கழகத்தில், உண்ணாவிரத போராட்டத்துக்கு யாருக்கும் அனுமதியளிக்கப்படவில்லை'என, ஐதராபாத் கமிஷனர் ஏ.கே.கான் தெரிவித்துள்ளார். 'ஆந்திரா ஒன்றுபட்ட மாநிலமாக இருக்க வேண்டும். தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படக்கூடாது' என, கோரி கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago