UPDATED : செப் 10, 2024 09:10 PM | ADDED : செப் 10, 2024 08:50 PM
சிட்னி: கேரளவைச் சேர்ந்தவர் ஆஸ்திரேலியா மாகாண அமைச்சராக பதவியேற்றார். கேரளா மாநிலம் கோட்டையத்தைச்சேர்ந்தவர் ஜின்சன் ஆன்டோ சார்லஸ், நர்சிங் படிப்பு படித்துள்ள இவர். 2011-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணம் டார்வின் பகுதியில் வசித்து வருகிறார். டார்வின் பல்கலை. பேராசிரியராக பணியாற்றிய நிலையில், அங்கு வடக்கு மாகாணத்தில் லிபரல் கட்சியில் இணைந்தார். இங்கு கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது.இக்கட்சியின் அமைச்சராக ஜின்சன் ஆன்டோ சார்லஸ் பதவியேற்றார். இவருக்கு விளையாட்டு, பலவகை கலாச்சாரம், சுகாதாரம், மாற்றுத்திறனாளிகள் நலம் உள்ளிட்ட ஏழு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவரை போன்று குஜராத்தைச் சேர்ந்த கோடா பட்டேல் என்பவரும் சட்டசபை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.