உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உச்சத்தில் இந்தியா; உலக நாடுகளின் விருப்பமும் அதுதான்; எரிசக்தி மாநாட்டில் மோடி சூளுரை

உச்சத்தில் இந்தியா; உலக நாடுகளின் விருப்பமும் அதுதான்; எரிசக்தி மாநாட்டில் மோடி சூளுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காந்தி நகர்: சோலார், காற்றாலை மற்றும் அணுசக்தி உள்ளிட்ட மின் உற்பத்திகளில் கவனம் செலுத்தி, நிலையான எரிசக்தி வளத்தை உருவாக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி முதல்முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சோலார் மேற்கூரை திட்டத்தின் மூலம் பயணடைந்த பயனாளிகளுடன் 20 நிமிடம் கலந்துரையாடினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hotk3r1g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தொடர்ந்து, 4வது உலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்களின் (RE INVEST) மாநாட்டின் தொடக்க விழாவிலும் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:நமது இலக்கு என்பது உச்சத்துக்கு செல்வதல்ல; உச்சத்திலேயே இருப்பது தான் நமது இலக்கு. இப்போதைய 21ம் நூற்றாண்டில் இந்தியா தலைசிறந்த நாடாக திகழும் என்பது இந்தியர்களின் எண்ணம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளின் எண்ணமும் தான். நம்மிடம் எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் வசதியில்லை. ஆகவே, சோலார், காற்றாலை, அணுசக்தி மற்றும் ஹைட்ரோ பவர் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதன்மூலம், நிலையான எரிசக்தி வளம் உருவாக்கப்படும். 2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் உற்பத்தி என்ற இலக்கை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 4வது உலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்களின் மாநாடு, தொலைநோக்கு பார்வை கொண்டதாக இருக்கும். இதன்மூலம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளினால் இந்தியா 2047ல் வளர்ந்த நாடாக மாறும். இந்த 3வது முறையான ஆட்சியின் முதல் 100 நாட்களில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பது மிகவும் முக்கியம். இந்த நாட்களில் பசுமை ஆற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். எரிவாயு நிதி திட்டத்தின் கீழ் ரூ.7,000 கோடி ஒதுக்க திட்டமிட்டுள்ளோம். அதேவேளையில், ரூ.31,000 மெகா வாட் ஹைட்ரோ பவரை உற்பத்தி செய்ய ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக ஒதுக்கி பணியாற்றி வருகிறோம், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

saravanan
செப் 17, 2024 21:30

பெருகி வரும் எரிசக்தி தேவைக்கேற்ப அதுவும் பசுமை எரி சக்தி துறையில் நாம் போக வேண்டிய தூரம் அதிகம் பிரதமர் மோடி அதை நன்றாகவே உணர்ந்து அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது பாராட்ட தக்கது. எல்லா எரி சக்தி பயன்பாட்டிலும் சுற்றுபுற சூழலை மாசபடுத்தாத காரணிகள் இல்லாமல் இல்லை. அதாவது கிளீன் எனர்ஜி என்ற ஒன்றை நம்மால் உருவாக்க முடியவில்லை. இதற்கான ஓரே தீர்வாக ஹைட்ரஜனை கூறுகிறார்கள் ஆனால் அதற்கான பூர்வாங்க முயற்சிகள் ஆரம்ப கட்டத்திலேயே இன்னும் இருக்கின்றன


வாசு, டல்லஸ் அமரிக்கா
செப் 16, 2024 22:10

இவரை அமெரிக்காவின் காற்றாலைகளையும், சோலார் பார்த்ததே இல்லை போலிருக்கு. ஓஹியோ மாகாணத்தில் சுமார் 20,30 மைல்நீளத்திற்கு ஆயிரக்கணக்கில் காற்றாலைகள். ஃப்ளோரிடாவில் லட்சக்கணக்கில் ஒரே இடத்தில் சோலார் பேனல்கள். அவிங்க சொல்லாம செய்யறாங்க. இவர் செய்யறத மெடல் குத்திக்கிறார்.


Easwar Kamal
செப் 16, 2024 16:49

இப்படியே புய்ல்ட் up பண்ணுங்கய்யா.


R Dhasarathan
செப் 16, 2024 15:17

இப்போது நம் நாட்டிலேயே தயாரிக்கிறார்கள். சீனாவை நம்பி நாம் இல்லை. எல்லா சூரிய சக்தி மேற்கூரை திட்டங்களுக்கு இந்திய அரசின் ஒப்புதலுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தகடுகளை தான் பயன்படுத்த முடியும்.


Velan Iyengaar
செப் 16, 2024 14:03

எரிசக்தியில் ஆத்மநிர்பராம் அது எப்படி சாத்தியம் என்று தெய்வப்பிறவிக்கு மட்டுமே வெளிச்சம் .... சோலார் பேனல் எல்லாம் சீன இறக்குமதி


வீரபாண்டி,அலங்காநல்லூர்
செப் 16, 2024 14:55

நீ போடுற கருத்துகளை எல்லாம் பார்த்தால் ஒருவேளை நீயும் சீன இறக்குமதியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.


Rengaraj
செப் 16, 2024 14:59

வேலன் அய்யங்கார் அவர்களே அப்படி பார்த்தால் நிறைய ஐட்டங்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வருகின்றன. சீனாக்காரன் யாரும் சும்மா கொடுத்துவிடவில்லை. அது நம் காசு. வெறும் பேனல் போதுமா ? எரிசக்தி திட்டம் நம்முடையதுதானே ? நம்நாட்டில் ஆகும்காசைவிட அதிகம் செலவழித்து ஒருபொருளை இறக்குமதி பண்ணினால் மட்டுமே கவலைப்படவேண்டும் . இப்போது செமிகண்டக்டர் துறையை நோக்கி நாம் நகர்கிறோம். அதிலும் விரைவில் தன்னிறைவு அடைந்துவிடுவோம்.


Hari
செப் 16, 2024 16:37

Velan is Chinese poor Labour....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 16, 2024 18:01

சோலார் பேனல்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன .... கோல்டி சோலார் என்னும் குஜராத் சார்ந்த நிறுவனம் கடந்த பத்தாண்டுகளில் ஐம்பது மடங்கு உற்பத்தியைப் பெருகியுள்ளது ..... பல நிறுவனங்கள் உள்ளன .... உதாரணத்துக்காக நான் ஒன்றைக் குறிப்பிட்டேன் ... சீன உற்பத்தி கழக அடிமைகள் பொது அறிவில் கூட வீக் தான் ...


சமீபத்திய செய்தி