உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆக.15 முதல் இடம் மாறும் காங்., கட்சி தலைமை அலுவலகம்

ஆக.15 முதல் இடம் மாறும் காங்., கட்சி தலைமை அலுவலகம்

புதுடில்லி: காங்., கட்சியின் புதிய தலைமை அலுவலகம் வரும் ஆக.15-ம் தேதி முதல் டில்லி கோட்லா சாலையில் புதிய கட்டடத்தில் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 1978-ம் ஆண்டு முதல் டில்லியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான 24, அக்பர் ரோட்டில் காங். தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு டில்லி பெரு நகர அபிவிருத்தி துறை சார்பில் கட்டடத்தை காலி செய்யும் படி நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய காங்., திட்டமிட்டது.இந்நிலையில் காங். கட்சிக்கு புதிய தலைமை அலுவலகம் மத்திய டில்லியில் 9, கோட்லா சாலை, தீன்தயாள் உபாத்யா மார்க் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2016ம் ஆண்டு ‛‛ இந்திரா பவன் '' என்ற பெயரில் கட்டடப்பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.ஆறு மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள உள்ள இந்த கட்டடத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து, தற்போது, உள் அலங்கார பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கு கட்சிஅலுவலகம் மட்டுமல்லாது , சேவாதள கட்டடம், இளைஞர் காங். அலுவலகம் உள்ளது. வரும் ஆக.15ம் தேதி முதல் கட்சியின் தலைமை அலுவலகம் இந்த கட்டடத்தில் செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ganesun Iyer
ஜூலை 29, 2024 21:06

ஆளே இல்லாத காங்கிரஸ்ஸுக்கு ஆறு மாடி கட்டிடமா...


R Kay
ஜூலை 29, 2024 20:34

ஏடு கொண்டலவாடா வெங்கட்ராமனா கோவிந்தா கோவிந்தா


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி