உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவாஜி சிலை நொறுங்கிய சம்பவம்: சிற்பியை தட்டி தூக்கியது மும்பை போலீஸ்

சிவாஜி சிலை நொறுங்கிய சம்பவம்: சிற்பியை தட்டி தூக்கியது மும்பை போலீஸ்

மும்பை: மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து நொறுங்கிய சம்பவத்தில் சிற்பி ஜெய்தீப் ஆப்தேயை போலீசார் கைது செய்தனர்.மஹாராஷ்டிர மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 35 அடி உயரம் கொண்ட இந்த சிலை கடந்த ஆக. 26-ம் தேதியன்று இடிந்து விழுந்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவாஜி சிலை உடைந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இந் நிலையில், சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை கடந்த ஆக.30-ம் தேதியன்று போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவத்தில் சிற்பி ஜெய்தீப் ஆப்தே என்பவர் தலைமறைவானார். பல இடங்களில் தேடி வந்த நிலையில் இன்று தானே மாவட்டத்தில் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
செப் 05, 2024 05:37

சின்னச் சின்ன ஆளுங்களையெல்லாம் தட்டித் தூக்கிருவோம் ஹை. பெரிய பெரிய ஆளுங்க நீலிக்கண்ணீர் வடிச்சு மன்னிப்பு கேட்டா உட்டுருவோம் ஹை.


முக்கிய வீடியோ