தனியார் பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்
தாவணகெரே ; தாவணகெரேயில் தனியார் பஸ், சாலை டிவைடரில் மோதி கவிழ்ந்ததில், 14 பயணியர் காயமடைந்தனர்.நேற்று காலை தாவணகெரேயில் இருந்து பெங்களூருக்கு 14 பயணியருடன் தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. ஜகரூர் அருகே வரும் போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை டிவைடரில் மோதி கவிழ்ந்தது.இதை பார்த்த அப்பகுதியினர், படுகாயமடைந்த பயணியர், ஓட்டுனரை மீட்டு, தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் கூறினர்.ஜகரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.தாவணகெரேவில் கவிழ்ந்த பஸ்சை பார்வையிட்ட அப்பகுதி மக்கள்.