உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 1.5 லட்சம் பொது வாகனங்களுக்கு கண்காணிப்பு கட்டணத்தில் விலக்கு

1.5 லட்சம் பொது வாகனங்களுக்கு கண்காணிப்பு கட்டணத்தில் விலக்கு

விக்ரம் நகர்:வாகன கண்காணிப்பு கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து, 1.5 லட்சத்துக்கும் அதிகமான ஆட்டோக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் அறிவித்தார்.கடந்த 2019 முதல் வாகனங்களை கண்காணிக்கும் பொறுப்பை டி.ஐ.எம்.டி.எஸ்., எனும் டில்லி ஒருங்கிணைந்த மல்டி மாடல் டிரான்சிட் சிஸ்டம் நிர்வகித்து வருகிறது.ஆண்டுதோறும் பொதுச்சேவை வாகனங்களுக்கு வாகன கண்காணிப்பு கட்டணமாக 1,200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்துடன் 18 சதவீத வரியை சேர்த்து, ஓட்டுனர்கள் 1,400 ரூபாயை இந்த ஆண்டு செலுத்த வேண்டி இருந்தது.இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:டில்லியில் 85,000 ஆட்டோக்கள் உட்பட 2.5 லட்சம் பொது சேவை வாகனங்கள் உள்ளன. ஏற்கனவே 1,200 ரூபாய் வாகன கண்காணிப்பு கட்டணத்தை செலுத்துவதில் இருந்து ஆட்டோக்களுக்கு 2019ல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.தற்போது, கிட்டத்தட்ட 1.5 லட்சம் வாகனங்களுக்கு இந்த ஆண்டு கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.டி.ஐ.எம்.டி.எஸ்., உடனான ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்துவிட்டோம். வாகனங்களைக் கண்காணிக்க தேசிய தகவல் மையத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !