உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறு தேர்வு

1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறு தேர்வு

புதுடில்லி, நாடு முழுதும், 'நீட்' எனப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ல் நடந்தது. இத்தேர்வை, 24 லட்சம் பேர் எழுதினர். ஜூன் 4ல் வெளியான முடிவுகளில், 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனர். சில மையங்களில், மாணவர்களுக்கு நேர இழப்பு காரணமாக கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, வினாத்தாள் கசிந்தது போன்றவை சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.விசாரணையில், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட, 1,563 மாணவர்களின் கருணை மதிப்பெண்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும், அவர்கள் விரும்பினால் மறு தேர்வில் பங்கேற்கலாம் என்றும் இல்லை எனில், கருணை மதிப்பெண்களை கைவிடலாம் என்றும், மத்திய அரசு தெரிவித்தது.இந்நிலையில், கருணை மதிப்பெண்கள் திரும்பப் பெறப்பட்ட, 1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறு தேர்வு நடக்கிறது. மொத்தம் ஏழு மையங்களில் தேர்வு நடக்கிறது. இதில் ஆறு மையங்கள் புதியவை. சண்டிகரில் உள்ள ஒரேயொரு தேர்வு மையம் மட்டும் ஏற்கனவே தேர்வு நடந்த மையம். இதில், இரு மாணவர்களே மறு தேர்வில் பங்கேற்க உள்ளனர். மறு தேர்வை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை, தேசிய தேர்வு முகமை செய்துள்ளது.இதற்கிடையே, ஜூலை 6ம் தேதி துவங்கவுள்ள, நீட் தேர்வுக்கான கவுன்சிலிங்கை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்து விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ