உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் 2 பேர் சுட்டுக்கொலை; ஓராண்டில் 83 பேர் என்கவுன்டர்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் 2 பேர் சுட்டுக்கொலை; ஓராண்டில் 83 பேர் என்கவுன்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சுக்மா: சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அட்டகாசம் ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் செல்வதற்கே அச்சப்படும் நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றும் வகையில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மாவோயிஸ்ட் படையினரின் முகாம்கள் பல அழிக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் மாவோயிஸ்ட்கள் 83 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் கிஸ்தாராம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், நேற்று கோப்ரா படையினருடன் சேர்ந்து பாதுகாப்பு படையினர் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kulandai kannan
மார் 01, 2025 18:42

மோடியின் மிகப்பெரிய சாதனை, நக்சல் அட்டகாசத்தை பெருமளவு குறைத்ததுதான்.


அப்பாவி
மார் 01, 2025 16:20

இவிங்க என்கவுண்ட்டர் செய்யச் செய்ய புதுசா நக்சல்கள் எப்புடி முளைச்சு வர்ராங்க? நாலு கார்ர்ப்பரேட் பணக்காரர்களை உருவாக்கிட்டா ஏழைகள் இல்லாம போயிருவாங்களா?


சுந்தர்
மார் 01, 2025 14:16

நம்ம தமிழ் நாட்டில நிறைய பேர் நக்சல் மாதிரி வேலை செய்றவங்க இருக்காங்க. ஆனா அவங்க கட்சில இருக்காங்க... கண்டுபிடிங்க பார்க்கலாம்...


புதிய வீடியோ