உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லட்சக்கணக்கில் வாடகை பாக்கி 2 தபால் அலுவலகத்துக்கு சீல்

லட்சக்கணக்கில் வாடகை பாக்கி 2 தபால் அலுவலகத்துக்கு சீல்

பெங்களூரு : லட்சக்கணக்கான ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள, இரண்டு தபால் அலுவலகங்களுக்கு பெங்களூரு மாநகராட்சி, 'சீல்' வைத்துள்ளது.இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை:பெங்களூரில் பல்வேறு இடங்களில், மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களை, தபால் துறை வாடகைக்கு எடுத்துள்ளது. செயின்ட் ஜான்ஸ் ரோட்டில் உள்ள, கடை எண் 1 மற்றும் வசந்த நகர் மார்க்கெட்டின் தரை தளத்தில் தபால் அலுவலகங்கள் இயங்குகின்றன.செயின்ட் ஜான்ஸ் ரோட்டில் உள்ள தபால் அலுவலகம், 1,665 சதுர அடி பரப்பளவு கொண்டது. 2014 ஏப்ரல் வரை வாடகை செலுத்தியது. அதன்பின் வாடகை உயர்த்தப்பட்டதால், வாடகை செலுத்துவதை நிறுத்தியது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பொருட்படுத்தவில்லை.எனவே பெங்களூரு மாநகராட்சி கிழக்கு மண்டல கமிஷனரின் உத்தரவுபடி, ஆகஸ்ட் 23 காலை 6:00 மணிக்கு, தபால் அலுவலகம் இயங்கிய கட்டடத்துக்கு 'சீல்'வைக்கப்பட்டது. இந்த கட்டடத்துக்கு தபால் துறை 88 லட்சத்து 91 ஆயிரத்து 695 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளது.வசந்தநகர் மார்க்கெட்டின், தரைத்தளத்தில் உள்ள தபால் அலுவலகம் 214 சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்த அலுவலகத்துக்கு 2016 ஜனவரி முதல் வாடகை செலுத்தவில்லை. 10 லட்சத்து 80 ஆயிரத்து 368 ரூபாய் வாடகை பாக்கி உள்ளது.பல முறை நோட்டீஸ் அளித்தும் பயனில்லை. எனவே இன்று (நேற்று) கிழக்கு மண்டல கமிஷனரின் உத்தரவுபடி, இந்த கட்டடத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன், 'சீல்' வைக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ