உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிசோரமில் நிலச்சரிவு 22 பேர் உயிரிழப்பு

மிசோரமில் நிலச்சரிவு 22 பேர் உயிரிழப்பு

அய்ஸ்வால்மிசோரமில், கல் குவாரி உட்பட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 22 பேர் உயிரிழந்தனர்.வங்கக் கடலில் உருவான 'ரேமல்' புயல், கடந்த 26ம் தேதி, மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது. மேற்கு வங்கத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த புயல், வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மிசோரமிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.இந்நிலையில், மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலின் பல்வேறு இடங்களில், நேற்று ஏற்பட்ட நிலச்சரிவுகளில், 22 பேர் உயிரிழந்தனர்.இதில், கல் குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும், 13 பேர் பலியாகினர். இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.இது குறித்து, மாநில முதல்வர் லால்துஹோமா கூறியதாவது:ரேமல் புயல் காரணமாக, அய்ஸ்வாலின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில், 22 பேர் உயிரிழந்தனர். இதில், மெல்தும் - ஹலிமென் இடையே அமைந்துள்ள கல் குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும், இரு சிறுவர்கள் உட்பட, 13 பேர் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. புயலின் தாக்கம் குறைந்திருந்தாலும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சிக்னல் மோசமாக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாநிலத்தில் பள்ளி கல்லுாரிகள், கல்வி நிறுவனங்களை மூட உத்தர விடப்பட்டு உள்ளது. வீட்டில் இருந்து பணிபுரியும்படி தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி